சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 26). அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லிங்க பாண்டி(40), மேட்டுவிளை செல்வராஜ் (55). இந்த 3பேரும் கூலித்தொழிலாளிகள். நேற்று மதியம் 3 பேரும் பூச்சிகாட்டிலிருந்து திசையன்விளைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திசையன்விளையில் இருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் பூச்சிகாட்டிற்கு ஜெயகிருஷ்ணன், சுரேஷ் ஆகிய 2 பேர் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தனர். இடைச்சிவிளை சோதனை சாவடி அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த 4 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 4 பேரும் லேசான காயங்களுடன் தப்பினர். இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.