கோவில் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் சாவு

சென்னை அருகே கோவில் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-17 06:08 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சந்திரா(வயது 45). இவர், கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் தீ மிதித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீக்குண்டத்தில் தவறி விழுந்து விட்டார். இதில் கால், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் அடைந்த சந்திராவை சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சந்திரா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்