நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக முற்போக்கு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக முற்போக்கு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

Update: 2022-05-16 23:07 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றிய கழுகுமலையை சேர்ந்த முருகலட்சுமி என்பவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவால் கடந்த 4-ந் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் கடந்த 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரின் மரணம் குறித்து பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும். மரணமடைந்த நர்சு முருகலட்சுமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவருடைய குழந்தைகளின் மேற்படிப்பை அரசு ஏற்க வேண்டும். குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முற்போக்கு அமைப்பினர் சுந்தர்ராஜ் தலைமையில் நெல்லை கலெக்டர் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன், திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்பு இயக்க தலைவர் விடுதலைபாண்டி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், நெல்லை மாவட்ட வண்ணார் சமுதாய நல சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், வண்ணார் சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி நடராஜன், தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழ்நாடு வண்ணார் பேரவை ஒன்றிய செயலாளர் சக்தி, மத்திய சலவைத்தொழிலாளர் சங்க மாநில துணைச்செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்