நெல் கொள்முதல் செய்து அரிசியாக ஒப்படைக்க அரவை ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்;கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
நெல் கொள்முதல் செய்து அரிசியாக ஒப்படைக்க அரவை ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நெல் கொள்முதல் செய்து அரிசியாக ஒப்படைக்க அரவை ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் அரவிந்த்
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் வாணிபக்கழக அரவை முகவர்களையும் (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்), வாணிபக்கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளையும் ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிறுதொழில் மையம், கோணம், நாகர்கோவில் -4 என்ற முகவரியையோ அல்லது அலுவலக தொலை பேசி எண் 04652 - 261214 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.