திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் சிவசூரிய பெருமான் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாதத்தை வரவேற்கும் விதமாகவும், உலக நன்மை வேண்டியும் சூரியனுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, கடங்கள் எடுத்துவரப்பட்டு சிவசூரியபெருமானுக்கு கடஅபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கவச அலங்காரத்தில் சிவசூரியபெருமானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் சூரிய பெருமானை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.