பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தல்

பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர.

Update: 2022-05-16 19:28 GMT
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து எடமலைப்பட்டிப்புதூர் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 2 வாலிபர்கள் 54 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், மது பாட்டில்களை கடத்தி வந்தவர்கள் கிராப்பட்டி மிஷன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 36), கிராப்பட்டி விறகுப்ேபட்டை பகுதியை சேர்ந்த மணி (29) என தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்