மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2022-05-16 18:30 GMT
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 207 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து வேதாரண்யம் அருகே செட்டிப்புலத்தை சேர்ந்த அமுதா என்பவரின் மகள் மதியழகி பாம்பு கடித்து இறந்ததற்காக அவரது தாயாருக்கும், , வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தாய் அஞ்சம்மாள் என்பவர் தீவிபத்தில் இறந்ததற்காக அவரது மகனுக்கும் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். இதில் அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்