மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-05-16 17:32 GMT
ராசிபுரம்:
மங்களபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மங்களபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் (பொறுப்பு) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்