சிறுத்தை நடமாட்டம் எதிரொலி: வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டம் எதிரொலி: வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

Update: 2022-05-16 17:31 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி, வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டின் அருகே இருந்த கோழியை சிறுத்தை ஒன்று அடித்து கொண்டு செல்லும் வீடியே காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர். 
இதனையடுத்து நேற்று அப்பகுதிகளுக்கு வனத்துறையினர் சென்று ஒலிப்பெருக்கி மூலம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் நடமாட வேண்டாம். இரவில் வெளியே படுத்து தூங்க வேண்டாம் என எச்சரித்தனர். அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்