தர்மபுரி மாவட்டத்தில் விடிய விடிய மழை
தர்மபுரி மாவட்டத்தில் விடிய விடிய மழை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய பெய்த இந்த மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் நேற்று முழுமையாக குறைந்தது. மாவட்டத்தில் மொத்தம் 237.20 மி.மீட்டர் மழை பதிவானது.
தர்மபுரி மாவட்டத்தில் பகுதி வாரியாக பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:- தர்மபுரி-13, பென்னாகரம்-47, மாரண்டஅள்ளி- 48, பாலக்கோடு- 36.20, ஒகேனக்கல்- 38, அரூர்- 34, பாப்பிரெட்டிப்பட்டி- 21. தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெய்த சராசரி மழை அளவு 33.89 மி.மீட்டர் ஆகும். மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் நேற்று குறைந்தது. ஏரிகள், குளங்கள் கிணறுகள் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியது. பரவலாக பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.