வெப்படையில் தனியார் நூற்பாலையில் தொழிலாளி தற்கொலை

வெப்படையில் தனியார் நூற்பாலையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-16 17:30 GMT
பள்ளிபாளையம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் காளிதாசன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலை ஒன்றில் தங்கி, கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் நூற்பாலைக்கு திரும்பினார். பின்னர் இரவில் அவர் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெப்படை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காளிதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, காளிதாசன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்