பூட்டை கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

பூட்டை கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு

Update: 2022-05-16 17:24 GMT

சங்கராபுரம்

தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கராபுரம் அருகே அரசம்பட்டு சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பூட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி தலைமையிலான பணியாளர்கள் கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீட்டில் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமலும், உபயோகமற்ற தேங்காய் மட்டை, பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், சிவசூரியன் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்