தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையின் ஓரத்தில் சிமெண்டு லாரிகள், நிலக்கரியை ஏற்றிச் செல்லும் லாரிகள், டேங்கர் லாரிகள் என பல்வேறு வகையான லாரிகள் நீண்ட நேரம் நிறுத்துவதினால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி, அரியலூர்.
அசுத்தமாக காணப்படும் கழிவறை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிலையத்தில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை பராமரிப்பு இன்றி உள்ளதால் அசுத்தமாக காணப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.
போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுமா?
பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதானல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தவிர்க்க வேண்டும் என்றால், உழவர் சந்தையின் வாசலை கிழக்கு திசைக்கு அல்லது வடக்கு திசைக்கு மாற்றி சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்தால் சாலையில் எவ்வித கடைகளும், வாகன நிறுத்தமும் செய்ய தடை செய்தால் போக்குவரத்து நெருக்கடி குறையும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், பெரம்பலூர்.