பேரிடர் மேலாண்மை பயிற்சி

தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-05-16 16:54 GMT
தொண்டி, 
திருவாடானையில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை தாங்கினார். இதில் ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசகர் பால் பேட்ரிக், பயிற்றுனர்கள் அருளானந்து, சத்தியப்பிரியா திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு அலுவலர்கள் பயிற்சிஅளித்தனர். பயிற்சியில் மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்