தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
சிவகிரி மேலூர் சிவராமலிங்கபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமர் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி பாஞ்சாலிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் பாஞ்சாலி பக்கத்து தெருவில் உள்ள தனது மகள் குழலாய்மணி வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த ராமர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.