இந்து தேசிய கட்சியினர் கைது
அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து தேசிய கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
யூடியூப் இணையதளத்தில் யூடூ புரூட்டஸ் என்ற பெயரில் இந்து மதத்தை அவதூறாக சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்தநிலையில் இதை கண்டித்தும் மேற்கண்ட யூடியூப் இணையதளத்தில் வீடியோவை நீக்கம் செய்யவும் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சி சார்பில் அரைநிர்வாண போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் இந்து தேசிய கட்சியினர் அரைநிர்வாண போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் அவர்களை மறித்து 4 பேரை கைது செய்தனர்.