பரமக்குடியில் விஷம் குடித்தவர் சாவு
பரமக்குடியில் விஷம் குடித்தவர் உயிரிழந்தார்.
பரமக்குடி,
பஸ் நிலையம் அருகில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்கவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மது போதையில் கிடப்பதாக நினைத்துள்ளனர். பின்பு சந்தேகப் பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து மயங்கி கிடந்தவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அதில் இறந்த நபர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா ஆழின் மதுரை கிராமத்தை சேர்ந்த ரவி (50) என தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் கூறினர். இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.