டெங்கு குறித்து விழிப்புணர்வு
காரைக்காலில் மாவட்ட நலவழித்துறை சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி காரைக்கால் திருநகரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமை தாங்கினார். நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் தமிழ்செல்வி, பூச்சி மற்றும் கொசுக்களால் பரவும் நோய் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் சிவவடிவேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரக் குழுவினர் அப்பகுதியில் டெங்கு கொசுப் புழுக்களை கண்டறிந்து அழித்தனர். பின்னர் அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.