புதிய மோட்டார் சைக்கிள் திருட்டு
கடையம் அருகே புதிய மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் சித்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாடாலிங்கம். இவருடைய மகன் ஆண்டபெருமாள். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆண்டபெருமாள் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களில் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.