கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது வழக்கு

கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-16 12:26 GMT
திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு டாக்டரின் பரிந்துரை சீட்டின் பேரில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். சட்டவிரோதமான கருக்கலைப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 இருப்பினும் சில மருந்து கடைகள் உள்ளிட்ட சில இடங்களில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மருந்து ஆய்வாளர்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் டாக்டரிகளின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தது, கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு 2 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும். 

பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களின் போது தாமாக மருந்துகளை எடுப்பதை தவிர்த்து, டாக்டரின் ஆலோசனை பெற்று உரிய மருந்து சீட்டுடன் மருந்துகள் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்