பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ விழா சிறப்பு வழிபாடு
தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவ விழா சிறப்பு வழிபாடு நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவ விழா நடந்தது. பரவாசுதேவ பெருமாளுக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து சுகந்த பரிமள திரவியங்களுடன் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார சேவை மற்றும் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா, கோவில் அர்ச்சகர் பிரசாந்த் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.