ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தற்கொலை

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-15 23:18 GMT

பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 63). ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவருடைய மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் தனிமையில் வசித்து வந்த அவர், முடக்குவாத நோய்க்கு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்