ஊஞ்சலூர் இச்சிப்பாளையத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை
ஊஞ்சலூர் இச்சிப்பாளையத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை புறப்பட்டனா்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே இச்சிப்பாளையத்தில் இருந்து அக்னி நட்சத்திர பழனி பாதயாத்திரை குழுவினர் பழனிக்கு சென்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தடை காரணமாக கோவிலுக்கு செல்லவில்லை.
இந்த ஆண்டு சுமார் 150 பேர் பழனிக்கு பாத யாத்திரை செல்வதற்காக நேற்று மதியம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்தனர். பின்னர் குடங்களில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு நிரப்பி பூஜைகள் செய்து வழிபட்டனர். அதன்பின்னர் அனைவரும் மகுடேசுவரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இச்சிப்பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர்.
இரவு அங்கேயே தங்கிவிட்டு் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் இருந்து பழனிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர்.