சுகாதார சீர்கேடு

உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

Update: 2022-05-15 20:38 GMT
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி-அரியலூர் சாலை மாரியம்மன் கோவில் ரெட்டிபாளையம் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் அருகே உள்ள உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் திறந்த வெளியில் விடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கொசுக்கள் மூலம் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் உணவகத்தில் இருந்து வீணாகும் கழிவுகளை தெருநாய்கள் மற்றும் மாடுகள் உண்பதற்காக குப்பை தொட்டியை கீழே தள்ளுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்