சரக்கு வாகனங்களில் வியாபாரம் செய்பவர்களால் விபத்து அபாயம்
சரக்கு வாகனங்களில் வியாபாரம் செய்பவர்களால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் சரக்கு வாகனங்களில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் சாலையில் நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மேலும் சாலையோர காய்கறி, பழக்கடைகளினால் இருசக்கர வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சரக்கு வாகனங்களில் வியாபாரம் செய்வோர்களையும், சாலையோர வியாபாரிகளையும் வியாபாரம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.