ஆண்டாவூரணி தூய அடைக்கல அன்னை ஆலய சப்பர பவனி

ஆண்டாவூரணி தூய அடைக்கல அன்னை ஆலய சப்பர பவனி நடந்தது.

Update: 2022-05-15 19:58 GMT
தொண்டி, 
ஆண்டாவூரணி தூய அடைக்கல அன்னை ஆலய சப்பர பவனி நடந்தது.
கொடியேற்றம்
திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி கிராமத்தில் தூய அடைக்கல அன்னை ஆலய திருவிழா நடைபெற்றது. பங்குத் தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் வசந்த், ஞானதாசன் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆலய திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.
இதில் தினமும் நவநாள் திருப்பலி சிறப்பு மறையுரை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் ஞானதாசன், லூயிஸ், ஜெயசீலன் ஜெயக்குமார், அருளானந்து ஆகியோர் நிறைவேற்றினர்.
சிறப்பு அலங்காரம்
தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங் களில் மிக்கேல் அதிதூதர், வியாகுல அன்னை, புனித செபஸ்தியார், தூய அடைக்கல அன்னை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, சப்பர பவனி மற்றும் கொடி இறக்கம் நடைபெற்றது. இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்ன தானம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்