அப்பர் சிலைக்கு பரிகார பூஜை

அப்பர் சிலைக்கு பரிகார பூஜை

Update: 2022-05-15 19:54 GMT
வல்லம்:
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி இரவு தொடங்கியது.  27-ந் தேதி அதிகாலை தேர் மின்கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் கிராமமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்து நடந்த தேரிலேயே ஐம்பொன்னாலான அப்பர் சிலையும், 300 ஆண்டு பழமையான ஓவியமும் சேதமில்லாமல் இருந்த நிலையில் நேற்று 18 நாட்களுக்கு பிறகு, தேரில் இருந்த அப்பர் சிலைக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், மகாலட்சுமி பூஜை, அஷ்டதிக் பூஜைகள், பிரேவசபலி செய்து அப்பர் சிலையை மடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அப்பர் சிலைக்கு பரிகார பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 16 மங்கல பொருட்களால் சிலைக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கிராமமக்கள் அப்பர் சாமியை கோவிலை சுற்றி வலம்  வந்து  தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்