மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது

மதுரை அருகே மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-15 18:53 GMT
பேரையூர், 

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வையூரை சேர்ந்தவர் ரெங்கையாகுமார் (வயது 39). இவர் சாப்டூர் மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ரெங்கையாகுமார் மெய்யனுத்தம்பட்டி கிராமத்தில் மின்கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை கண்டறிந்து மின் துண்டிப்பு செய்ய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், ரெங்கையாகுமார் மின்சாரத்தை துண்டிப்பு செய்ய முயன்ற போது, அதே ஊரை சேர்ந்த கருப்பையா மற்றும் அவருடைய மகன் அர்ஜுனன் (வயது 20) ஆகியோர் ரெங்கையாகுமாரை அவதூறாக பேசி உருட்டு கட்டையால் அடித்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளனர். மேலும் அவருடைய செல்போனை பறித்து தூக்கி எறிந்து உள்ளனர். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜுனனை கைது செய்தனர். இது தொடர்பாக கருப்பையாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்