மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Update: 2022-05-15 18:46 GMT
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி புதூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பொட்டிரெட்டிபட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பு இருந்து மெயின் ரோடு வழியாக மகா மாரியம்மன் கோவில் சென்றடைந்தது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்பு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் மணியக்காரர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்