திருமயம்:
திருமயம் அருகே ராங்கியத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, திருமயம், பள்ளத்தூர், அழகாபுரி, கோனார்பட்டு, ஆத்தங்குடி, அரிமளம் உள்பட ஏராளமான பகுதிகளில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் ஓடியது. காளைகள் முட்டியதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மஞ்சுவிரட்டை ராங்கியத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.