ரத்த தான முகாம்
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ராஜராஜன் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ராஜராஜன் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா முகாமை தொடங்கி வைத்தார். ராஜ ராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனர் ராஜேசுவரி வரவேற்றார். ரத்ததான இயக்கத்தின் நிறுவனர் பிரகாஷ் மணிமாறன் வாழ்த்துரை வழங்கினார். அரசு டாக்டர் அருள்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்த தானம் வழங்குவதில் மாணவர்களுக்கு உள்ள பயன்களை விளக்கி உரையாற்றினார். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ரத்த தானம் வழங்கினர்.