பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
காரைக்குடி
காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 21).இவர் வ.உ.சி. சாலையில் 2 அடி நீளம் உள்ள வாளுடன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விரைந்து சென்று மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.