கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஏரிக்குள் அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஏரிக்குள் அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
பெங்களூரு: பெங்களூரு கோரமங்களா 3-வது பிளாக் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கணவரும், மனைவியும் ஒரு ஏரியின் கரையில் நடைபயிற்சி சென்றனர். அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக திடீரென தகராறு உண்டானது. இதனால் கோபம் அடைந்த பெண் ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் அமர்ந்து கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பெண்ணிடம் ஏரியில் இருந்து வெளியே வரும்படி கூறினர்.
ஆனால் தன்னை காப்பாற்ற முயன்றால் ஏரியில் மூழ்கி தற்கொலை செய்வேன் என்று பெண் மிரட்டல் விடுத்தார். இதன்பின்னர் நீண்ட நேரம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் மனம் மாறிய பெண் ஏரியில் இருந்து வெளியே வந்தார்.