தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆன்லைன் வருகை பதிவு குறித்து பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆன்லைன் வருகை பதிவு குறித்து பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-15 16:58 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வருகை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பணித்தள பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம், விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. 

புதிய செயலி

இதில்,  மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் என்கிற செயலியை பயன்படுத்தி, செல்போன் மூலமாக பணியாளர்கள் வருகையை பதிவு செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை, மாவட்ட ஊராட்சிகள் குழு செயலாளர் குருசாமி தலைமை தாங்கி,  பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு செயல்விளக்கம் அளித்தார். 

பயிற்சியின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், கணினி உதவியாளர் செந்தில் மற்றும் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்