மணல் கடத்தல்; சரக்கு வாகனம் பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார், தென்மங்கலம் மலட்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மணவாளன் என்பவர் சரக்கு வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் வருவதை பார்த்த அவர், சரக்கு வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.