இலவச இருதய சிகிச்சை முகாம்

மயிலாடுதுறை அருகே இலவச இருதய சிகிச்சை முகாம் நடந்தது

Update: 2022-05-15 16:43 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் மூவலூர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குமாரசாமி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்தி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில், பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியை சேர்ந்த 20-க்கு மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு, ஈ.ஜி.சி., சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். மேலும், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்று இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமின் மூலம், 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். 

மேலும் செய்திகள்