உரிமையாளருக்கு ரூ10 ஆயிரம் அபராதம்

உரிமையாளருக்கு ரூ10 ஆயிரம் அபராதம்

Update: 2022-05-15 16:36 GMT
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் சொந்த வாகனத்தில் தொழிலாளர்களை வாடகைக்கு ஏற்றி சென்ற வேன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
சொந்த வாகனங்களில் வாடகைக்கு
திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை அந்த நிறுவனங்ளை சேர்ந்த வாகனங்களில் அழைத்து வருவதும், பின்னர் பணி முடிந்ததும் அதே வாகனங்களில் அழைத்து செல்வதும் வழக்கமாக உள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று வாகனங்களை இயக்கி வருகின்றன. ஆனால் திருப்பூரில் ஒரு சில சொந்த வாகனங்கள் விதிமுறையை மீறி தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துவதாக புகார் எழுந்தது. 
ரூ.10ஆயிரம் அபராதம்
இதையடுத்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பூர் ரெயில் நிலைய பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது பல வாகனங்கள் விதிமுறைகளை மீறி இயங்கியது தெரிய வந்தது. மேலும் சொந்த வாகனத்தில் பனியன் நிறுவன தொழிலாளர்களை வாடகைக்கு ஏற்றிச் சென்றதாக வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த வாகனத்தின்  உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்