அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கேரளா விரைவு
5 மாவட்டங்களில் மழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கேரளா விரைந்தனர்.
அரக்கோணம்
கேரளாவில் 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரள மாநில அரசின் வேண்டுக்கோளுக்கிணங்க மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு 5 குழுவினர் விரைந்துள்ளனர். ஒரு குழுவிற்கு 15 முதல் 20 வீரர்கள் விதமாக அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் அரக்கோணம் நகரி குப்பத்தில் இருந்து சாலை மார்க்கமாக கேரள மாநிலத்திற்கு சென்றனர்.