வாஷி கழிமுகப்பகுதியில் தொழில் அதிபர் உடல் மீட்பு
வாஷி கழிமுகப்பகுதியில் தொழில் அதிபர் உடல் மீட்கப்பட்டது.
மும்பை,
நவிமும்பை, வாஷி கழிமுகப்பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதப்பதை பொதுமக்கள் கவனித்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கழிமுகப்பகுதியில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் மும்பை பாண்டுப் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பிரசாந்த் துக்காராம் விச்சாரே (வயது 54) என்பது தெரியவந்தது. தொழில் அதிபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தொியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.