கயத்தாறு அருகே ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா தேர் பவனி
கயத்தாறு அருகே ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பங்குத்தந்தைகள் நாலாட்டின்புத்தூர் தேவராஜ், தூத்துக்குடி சேவியர், ஊத்துமலை அந்தோணி தலையால்நடந்தான்குளம் பாஸ்கர் கோவில்பட்டி செல்வின், நாலாட்டின்புத்தூர் பிராங்கிளின், அகஸ்டின், அந்தோணி, சேவியர், ஆகியோர் திருப்பலி, நற்கருணை ஆசீர் போன்றவற்றை நிறைவேற்றினர்.
நேற்று காலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பங்குத்தந்தை கே.டி.சி. நகர் சார்லஸ் அடிகளார் தேரடி திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தேர் பவனியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர் மதியம் ஒரு மணிக்கு நிலைக்கு வந்தது. இறுதியாக இளையரசனேந்தல் பங்குதந்தை சகாய சின்னப்பன் கொடியிறக்கம் செய்தார். விழாவில் கோவில் நிர்வாகிகள், விழா கமிட்டியார் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அருகே வி.நாச்சியார்பட்டி புளியடி சக்கரத்தாழ்வார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜாமணி, டாக்டர் ரமேஷ், பொறியாளர் ரெங்கசாமி, ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, ஆசிரியை நிர்மலா கிருஷ்ண ராமானுஜம், கர்னல் நாராயணசாமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
கோவில்பட்டி சுபா நகர் ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நேற்று ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டார்.