தரைவழி மின் கேபிள் அமைக்கும் பணி

ஜோலார்பேட்டை பகுதியில் தரைவழி மின் கேபிள் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தர்.

Update: 2022-05-15 15:03 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகரப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் சீரான மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தரை வழி மின் கேபிள் அமைக்கும் பணி மேற்கொள்ள போர்க்கால அடிப்படையில் ஜோலார்பேட்டை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதியை நேற்று மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அப்போது உடனடியாக பணிகளை மேற்கொள்ள மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. க.தேவராஜ், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகர பொறுப்பாளர் அன்பு என்ற அன்பழகன், வாணியம்பாடி செயற்பொறியாளர் பாட்ஷா முகமது, உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் ஜோலார்பேட்டை உதவி பொறியாளர் கோமதி உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்