வரத்து கால்வாய்களை சீரமைக்க நிதி வழங்க வேண்டும்; விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை
தமிழகத்தில் வரத்து கால்வாய்களை சீரமைக்க நிதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தலக்குண்டு:
தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், வத்தலக்குண்டுவில் நடந்தது. இதற்கு அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பொருளாளர் சரவணன், இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பிரதமர் மோடிக்கும், சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், மாநிலம் முழுவதும் வரத்து கால்வாய்களை சீரமைக்க நிதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.