பொக்லைன் எந்திரம் மோதி மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே பொக்லைன் எந்திரம் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-05-15 14:15 GMT
கோபால்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த சேசுராஜ் மனைவி சேசுமேரி (வயது 62). இவர் இன்று மதியம் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக திண்டுக்கல்-நத்தம் சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது நத்தத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பொக்லைன் எந்திரம் சேசுமேரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பொக்லைன் எந்திர ஆபரேட்டரான சின்னாளப்பட்டியை சேர்ந்த வாகித்அலி (31) மீது சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்