தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 30 பேர் நெல்லை விரைந்தனர்
கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 30 பேர் நெல்லை விரைந்தனர்.
அரக்கோணம்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா பொன்னாக்குடி கல்குவாரியில் சுமார் 300 அடி உயரத்தில் இருந்து பாறை விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தினை நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டனர்.
அதன் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை இன்ஸ்பெக்டர் விவேக் ஷிரிவாஸ்த்தவா தலைமையில் 30 வீரர்கள் சரிந்த கட்டமைப்பு தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள், மருத்துவ உதவி உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றுடன் நெல்லைக்கு விரைந்தனர்.