ஆதித்ய தாக்கரேயின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு

மந்திரி ஆதித்ய தாக்கரேயின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-15 13:24 GMT
படம்
மும்பை, 
மாநில சுற்றுலா துறை மந்திரியும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே அயோத்திக்கு ஜூன் 10-ந் தேதி செல்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அவரது அயோத்தி பயணம் ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சிவசேனா செய்தி தொடா்பாளர் சஞ்சய் ராவத் கூறுகையில், "ஜூன் 10-ந் தேதி மராட்டியத்தில் உள்ள 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எனவே ஆதித்ய தாக்கரே ஜூன் 15-ந் தேதி அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்வார்" என்றார்.

மேலும் செய்திகள்