ஊட்டியில் பெண்கள் விடுதியில் மகளிர் ஆணைய தலைவி ஆய்வு

ஊட்டியில் பெண்கள் விடுதியில் மகளிர் ஆணைய தலைவி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-05-15 11:31 GMT
ஊட்டி

ஊட்டியில் மாவட்ட அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி தலைமை தாங்கினார். உறுப்பினர் கீதா நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. 

 இதையடுத்து மகளிர் ஆணையத் தலைவி குமாரி ஊட்டி, எல்லநள்ளி பகுதியில் உள்ள நீடில்ஸ் தொழிற்சாலை, குன்னூர் தேயிலை தொழிற்சாலை, லிட்டில் சிஸ்டர்ஸ் முதியோர் இல்லம், குன்னூர் மற்றும் ஊட்டியில் உள்ள பணிபுரியும் பெண்கள் விடுதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு மாணவியர் விடுதி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்