சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-05-15 11:16 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள புத்தன் தருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் விஜயகுமார். கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் காரில் திசையன்விளை சென்றுவிட்டு ஊர் அருகிலுள்ள அம்மன் கோவில் முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த வரதராஜ பெருமாள், விஸ்வா, ராஜா, சாலமன் ஆகிய 4 பேர் விஜயகுமார் காரை மறித்து தகராறு செய்துள்ளனர். திடீரென்று அவரை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு 4 பேரும்தப்பி ஓடிவிட்டார்களாம். காயமடைந்த விஜயகுமார் முதல் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வரதராஜபெருமாள் உள்ளிட்ட 4 பேரை தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்