கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-14 21:49 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள்சாமி(வயது 70). இவர் சொந்த வேலை காரணமாக சூசையப்பர்பட்டினத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வந்தார். பின்னா் மீண்டும் சூசையப்பர்பட்டினம் நோக்கி அவர் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-சிதம்பரம் சாலையில் சூரியமணல் கிராமம் அருகே சென்றபோது, அருள்சாமி மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்