உடையார்பாளையம்:
உடையார்பாளையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்தை நடந்தது. வழக்கமாக மாலை 4 மணிக்கு மேல்தான் சந்தையில் வியாபாரம் மும்முரமாக நடக்கும். ஆனால் உடையார்பாளையத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை பெய்தது. இதனால் வாரச்சந்தையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வராத நிலையில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் காய், கனிகளை விற்க முடியாமல் தவித்தனர்.