ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-14 21:48 GMT
அரியலூர்:
அரியலூர் பஸ் நிலைய பகுதியில் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் உள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பாதையில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்தப்படுவதோடு, குப்பைகளும் கொட்டப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்பு இரும்பு கம்பிகளால் ஆன கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு செல்லும் பாதை பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்